Thursday, November 18, 2010

ACN வீடியோ தொ(ல்)லைபேசி...எல்லாமே இலவசம்...?

தமிழர்களை உலகத்தில இருக்கிற எல்லா இனமும் எமாத்தி முடிஞ்சு, இனி எங்களை ஏமாத்திறதுக்கு யாரு இருக்கினம்? யாருமே இல்லாட்டில் என்ன. தமிழனை ஏமாத்த எங்கயாவது இருந்து ஒரு தமிழன் வருவான்.

இந்த வரிசையில் தற்பொழுது இணைஞ்சிருக்கிறது ACN வீடியோ இலவச தொலைபேசி நிறுவனத்தினர்.

இதை ஒரு நிறுவனம் என்டு சொல்லுறதை விட ஒரு கொள்ளைக்கும்பல் என்று சொல்லலாம். இப்ப சுவிசில இவையள் மும்முரமா ஆட்கள் சேர்க்கத்தொடங்கி இருக்கினம்.

சரி இப்ப விசயத்துக்கு வருவம்.

ACN என்ட நிறுவனம் பல ஆண்டுகளாக விடியோ தொலைபேசி சந்தையில வெற்றிகரமா நடந்து கொண்டிருக்கிற ஒரு நிறுவனமாம்.

கிட்டத்தட்ட 21 நாடுகளில இவையளுக்கு மில்லியன் கணக்கில வாடிக்கையாளர்கள் இருக்கினமாம். இவையின்ர சேவையில சேர்ந்து பணக்காரர்கள் ஆன ஆக்களின்ர போட்டோக்கள் அடிங்கிய ஒரு விளம்பர புத்தகமும் கையில் கொண்டு வருவினம்.
நீங்களும் எப்படி பணக்காரர் ஆகலாம் என்டு உங்களுக்கு மூளைச்சலவை செய்யப்படும்.



இவையின்ர தொழில் தான் என்ன?

நீங்கள் தற்பொழுது பாவிக்கும் தொலைபேசி இணைப்பிற்கு செலுத்தும் அதே மாதாந்த பணத்தை தான் இவர்களுக்கும் செலுத்த வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் நீங்கள் அனைவருடனும் (இது பொய்) இலவசமாக பேசலாம் என்பார்கள். சிறிலங்கா இந்தியா போன்ற நாடுகளிற்கும் விடியோ தொலைபேசி பாவிக்கலாம் என்பார்கள். நீங்கள் இவர்கிளிற்கு ஒரு வாடிக்கையாளரை சேர்த்துவிட்டால் உங்களிற்கு கமிசன் கிடைக்கும். பின்பு நீங்கள் சேர்த்துவிடுபவர் கொண்டு வந்து சேர்த்துவிடுபவர்களிற்கும் உங்களிற்கு கமிசன் கிடைக்கும்.


மேலே குறிப்பிட்டது போல இவர்களின் சேவை 21 நாடுகளில் உள்ளது. இந்த 21 நாடுகளில் சிறிலங்கா, இந்தியா, மலேசியா போன்ற தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகள் இல்லை. அப்படியென்றால் இந்த நாடுகளிற்கு விடியோ தொலை பேசி அழைப்பு சாத்தியமில்லையா? இருக்கிறது. இங்கே தான் இவர்களின் ஏமாற்று வேலை வெளிவருகின்றது.  சிறிலங்காவில் வசிக்கும் உங்கள் உறவினரிடம் இந்த சேவை இருக்க முடியாது (சிறிலங்காவில் இவர்களின் சேவை இல்லை).ஆனால் உங்களின் உறவினரிடம் விடியோ பார்த்து பேசும் தொலைபேசி இருந்தால் நீங்கள் அவாருடன் பேசலாம். ஆனால் இலவசமாக அல்ல! ACN வைத்திருப்பவர்களுடன் மட்டுமே நீங்கள் இலவசமாக பேசலாம். ஆனால் இதை அவர்கள் உங்களிடம் சொல்ல மாட்டார்கள். அப்படியே நீங்கள் கேட்டால் ஆம் இலவசம் என்று உங்களை ஏமாற்றுவார்கள். இந்த இடத்தில் நீங்கள் அதை உடனடியாக அந்த இடத்திலயே எழுத்து மூலமாக தர முடியுமா என்று கேட்கவும். எப்படியும் எதோ சொல்லி உங்களை சமாளிப்பார்கள். ஏமாற வேண்டாம்!

சரி இதெல்லாம் கவனிக்காமல் நீங்கள் கையெழுத்துப்போட்டு அவர்களின் சேவையில் இணைந்து விட்டிர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

ஒரு மாதம் களித்து நீங்கள் பில் வருகிறது. பில்லை பார்த்து நீங்கள் அதிச்ச்சியடைந்து இவர்களிற்கு புகார் செய்து கடிதம் எழுதுகிறீர்கள். எங்கே அனுப்புவீர்கள்? அவர்களின் முகவரி இது தான்: ACN Communications Schweiz GmbH, c/o TMF Services SA, Rue de Hesse 16, 1200 Genève (தகவல் http://www.moneyhouse.ch/). இங்கே இவர்களின் இரண்டாவது கோல்மால் வேலை அப்பட்டமாகின்றது. அதாவது நீங்கள் கையொப்பம் இட்ட பத்திரத்தில் இவர்களின் முகவரி வெறுமனே ACN Communications Schweiz GmbH, Rue de Hesse 16, 1200 Genève என்று மட்டுமே இருக்கும். இப்பொழுது நீங்கள் புகார் கடிதம் அனுப்புவதென்றால் எங்கே அனுப்புவிர்கள்? ஆம், நீங்கள் கையெழுத்திட்ட படிவத்தில் உள்ள ACN Communications Schweiz GmbH, Rue de Hesse 16, 1200 Genève  முகவரிக்கு தான் அனுப்புவிர்கள் (வேறு முகவரி நீங்கள் அறிந்திருக்கு சாத்தியம் இல்லை).  ஆனால் இது போய் சேர்வது சாத்தியமில்லாத ஒரு விடயம். அதாவது உங்கள் வீட்டில் நீங்கள் ஒருவரை வாடகைக்கு வைத்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். வீடு உங்களின் பெயரில் உள்ளது. நீங்கள் வாடகைக்கு வைத்திருப்பவர்க்கு யாராவது அவரின் பெயரை எழுதி கடிதம் போட்டால் வந்து சேராது என்பதை விளங்கிக்கொள்கிறீர்களா? ஆனால் நீங்கள் வாடகைக்கு வைத்திருப்பவரின் பெயரை எழுதி விட்டு c/o என்று உங்களின் பெயரை போட்டால் வந்து சேரும். இந்த நிறுவனத்தாரிற்கு நீங்கள் புகார் அனுப்பும் போது c/o TMF Services SA என்று முகவரியையும் சேர்க்க வேண்டும் என்று உங்களிற்கு எப்படி தெரியும்? இதை அவர்கள் உங்களிடம் சொல்லவும் மாட்டார்கள். அப்படியே நீங்கள் இவர்கள் மேல் சட்ட நடிவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் உங்களிற்கு வந்து சேரும் அதிக படியான நட்டத்தொகை CHF 20'000.00 மட்டுமே. இவர்களின் ACN Communications Schweiz GmbHவின் கப்பிட்டல் (capital) வெறும் CHF 20'000.00 மட்டுமே.

இப்படியான சேவைகளை இங்கே Schneeballsystem அல்லது Pryamidensystem என்று சொல்வார்கள். சரி ஒரு தடவை கணக்கு பார்ப்போம்.
ஒரு நாள் சுவிசில் உள்ள ஒருவர் சுவிசின் முதலாவது வாடிக்கையாளர் ஆகின்றார். அவர் தனக்கு தெரிந்த ஒருவரை ACN நிறுவனத்தில் சேர்த்து விடுகின்றார். ஒவ்வொருவருக்கும் கமிசன் வரும் என்பதால் உற்சாமாக ஆட்களை சேர்க்கு முயற்சி செய்வார்கள்.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாரமும் ஒரு வாடிக்கையாளரை கொண்டு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். புதிதாக இணைபவர்களும் ஒவ்வொருவரை கொண்டு வருகிறார்கள். இப்படியே போனால் 27 வாரங்கள் சென்ற பின் அதாவது அரை வருடத்திற்கு பிறகு சுவிசில் கிட்டத்தட்ட 134 மில்லியன் ACN வாடிக்கையாளர்கள் இருக்க வேண்டும். இது சாத்தியமா?


இதை நீங்கள் அவர்களிடம் சொன்னால் இன்டர்நெட்டில் வருகின்ற அனைத்தும் உண்மையாகி விடுமா? அங்கே யார் என்ன எழுதினாலும் உண்மை என்று நம்பி விடுவீர்களா என்று உங்களை குறுக்குக்கேள்வி கேட்பார்கள்.

சரி நான் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டாம்.
சுவிசில் இருந்து வெளிவரும் http://www.ktipp.ch/ என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.



கொஞ்சம் இன்டர்நெட்டை தோண்டிப்பாத்த இவங்கட சுத்துமாத்து வேலையள் தெரியவரும்.

இந்த தமிழ் பணப்பேய்களை எங்கே கண்டாலும் ஒதுங்கியே நில்லுங்கள். ஏமாந்து போற நாங்கள் இருக்கிற வரைக்கும் ஏமாத்திற தமிழங்களும் இருக்கத்தான் செய்வினம்.

Thursday, November 4, 2010

இந்திய மதவாதியின் குறான் எரிப்பு

எதிர்வரும் வெள்ளிக்கிழமை மூன்று இந்திய மதவாதிகள் சுவிசின் பாராளுமன்றம் முன்பாக குறான் எரித்து போராட்டம் செய்யவுள்ளதாக இன்று பத்திரிகையில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

றோம் (இத்தாலி) நகரில் Tetus Leo Panakal


ஒரு பிள்ளையும் குறானுடன் தொடர்பில் வருவதை தான் விரும்பவில்லை என்று கடந்த 8 வருடமாக சுவிசில் வசிக்கும் Tetus Leo Panakal  (42) ௬றுகிறார்.

குறானில் இருப்பது பொய் மற்றும் கொடியவை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புனிதமான குறானை எரிப்பது மக்களிடத்தில் பல பிரச்சனைகளை கொண்டுவரும் என்று மத குருமார்கள் ௬றுகிறார்கள்.

Tetus Leo Panakal  (42)  இந்த போராட்டத்தில் தனது உயிர் போனாலும் அதை பற்றி தான் கவலையடயப்போவதில்லை என்று ௬றுகிறார்.

ஏற்கனவே கடந்த மாதம் அமெரிக்காவில் இப்படியான ஒரு செயலை பராக் ஒபாமா தலையிட்டு நிறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிகையில் வெளிவந்த செய்தி

Thursday, October 28, 2010

ஆணியை யார் புடுங்குறது?

ரெம்ப நாட்களாகவே தமிழீழம் நோக்கிய பாதையில ஒரு ஆணி அந்த லட்சியத்தை நோக்கி போறவர்களின் காலில் குத்தி அவர்களின் பயணத்தை தற்காலிகமா நிறுத்தி வைத்துள்ளது. நானும் இந்த ஆணியை யாராவது புடுங்குவார்கள் அல்லது புடுங்க வருவார்கள் என்று பார்த்தால் யாரும் வருவதாக தெரியவில்லை.

என்ன ஆணி? என்ன புடுங்கனும்? ஒரே குழப்பமா இருக்குதில்ல?

இந்த ஆணி வேற யாரும் இல்லை. தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் சுவிஸ் நிதித்துறைப்பொறுப்பாளர் அப்துல்லா மற்றும் அவரின் மறைமுக அல்லக்கைகள் தான்.

தமிழீழம், மாவீரர்கள், தலைவர் இந்த மூன்று வார்த்தைகளையும் இன்று சுவிசில் வியாபாரமாக்கிய பெருமை கறள்பிடித்த ஆணி அப்துல்லாவையே (அப்துல்லா சார் உங்களுக்கு எங்களால டாக்டர் பட்டம் தான் தர முடியல, இதையாவது ஏற்றுக்கொள்ளுங்க) சேரும்.  

இந்த மூன்று மந்திரச் சொற்களுக்கும் மயங்கி ஏமாந்து போன நூற்றுக்கணக்கான அப்பாவிகளில் ஒருவரின் கதையை பார்ப்போம்.

போர் ஊச்சமடைந்த நேத்தில் கறள்பிடித்த ஆணியும் அவரது அல்லக்கைகளும் நிதி சேர்ப்பில் ஈடுபட்டனர். இவர்கள் குறி வைத்த ஆட்கள் தமிழீழம், மாவீரர்கள், தலைவர் இந்த மூன்று சொல்லுக்கும் மயங்குபவர்கள். இதில் பல (உண்மையான) பணியாளர்களும் அடக்கம். யோசிப்பதற்க்கு சந்தர்ப்பமே கொடுக்காமல் விரட்டி விரட்டி பின் தொடர்ந்து சென்று கடன்பத்திரத்தில் கையெளுத்து வாங்கினார்கள்.  பலர் அவர்களில் உள்ள நம்பிக்கையில் கடன்பத்திரத்தில் என்ன உள்ளது என்று பார்க்கவேயில்லை. கடனின் மாதாந்த கணக்கை
கறள்பிடித்த ஆணி தானே கட்டுவதாக உறுதிமொழி அளித்ததே இதற்கு காரணம்.  இந்த அல்லக்கைகளில் முக்கியமானவர்கள் உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சுவிஸ் (WTCC) மற்றும் வெறும் நன்றியை மட்டும் எதிர்பார்க்கும்  ஒரு தமிழ் பைனான்ஸ் நிறுவனம் (அவர்களுக்கும் வங்கியில் அல்லக்கைகள் உண்டு).  சரி இனி இவர்களின் திருவிளையாடல்களை பார்ப்போம்.

 








இந்தக் கொள்ளையில் சம்மந்தப்பட்ட வங்கிக்கும் தொடர்பு உள்ளதாகவே தம்பி நம்புகிறான். எந்தவொரு வங்கியும் இப்படி விண்ணப்பங்களை கவனிக்காமல் விடாது. ஆனால் தம்பியின் பார்வையில் "வெறும் நன்றியை மட்டும்" எதிர்பார்க்கும் அந்த கடன் மோசடி நிறுவனத்திற்கு சம்மந்தப்பட்ட வங்கியின் வேலைபார்க்கும் ஒருவருக்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாகவே தோன்றுகிறது. என்ன "நன்றி" சார் எங்களால புடுங்க முடிஞ்சத புடுங்க சொன்னீங்க. முடிங்சதை புடுங்கிறம்.

இதற்கு மேலும் இந்த அகில உலக சுத்துமாத்து தமிழ் நிறுவனத்திடம் நீங்க கடன் வாங்கப்போகும் போது ஒரு நிமிடம் யோசியுங்க. அட நீங்க கடன் வாங்காமல் விட்ட உடனே இந்த "நன்றி கடன்" நிறுவனம் இல்லாமல் போயிடாது. வாழ்க்கை முழுவதும் உட்கார்ந்து சப்பிடுவதற்கான பணத்தை இந்த நிறுவனம் ஏற்கனவே எங்களின் புண்ணியத்தில் சம்பாதித்து முடித்து விட்டது. சார் நான் சொல்றது சரிதானே?


அபதுல்லா சார் நீங்க புதிசா ஒரு ரேஸ்ரோறண்ட் வாங்கியிருக்கிறதா கதை அடிபடுது.மெய்யாலுமா?  அதுக்கும் அடுத்த ஆப்பு தம்பி கைவசம் வச்சிருக்கிறான். 

நீங்க இப்பா பார்ட் ரைமா உங்கட ரெஸ்ரோறண்ட்ல கல்யாண வீடுகளுக்கு சமைத்து குடுத்து சம்பாதிக்கிறதா கேள்விப்பட்டன். அந்தப் பணத்தில மக்களிட்ட வாங்கின கடனை திருப்பிக்கொடுக்கப்போறதா சொல்லித்தான் ஓடர் எல்லாம் எடுக்கிறீங்களாம் (அட பாவிங்களா இன்னுமாடா இவனுவள நம்பிக்கிட்டிருக்கிறீங்க).
தொலைபேசில நீங்க ரெண்டு பேரும் மாறி மாறி ஒருவர் மேல் ஒருவர் பழி போட்ட MP3க்கு வெளியீட்டுவிழா வைக்கவா?

உங்கட இந்த மோசடி சாம்ராஜ்ஜியத்திற்கு தம்பி மிக விரைவில் பாடை கட்டுவான் என்பதை அறியத்தருறோம்.

ஜயா உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களே (அப்படி யாராவது இருக்கிறீங்களா?) இதுக்கு நடவடிக்கை இனி என்டாலும் எடுப்பீங்களா? இல்லை இந்தக்கொள்ளையில உங்களுக்கும் பங்கு உள்ளது என்று ஒத்துக்கொள்கிறீங்களா? எது எப்படியோ அந்த சம்மந்தப்பட்ட நபருக்கு நீங்க சம்பளம் கொடுக்கிறதா உங்கட கறள்பிடித்த ஆணி அப்துல்லா படிவத்தில நிரப்பி கொடுத்திட்டார். இது பொலிசுக்கு போன நீங்க பொலிசுக்கும் சேர்த்து பணம் கொடுக்கனும். பண்ணின பாவத்துக்க ஒரு கொஞ்சமாச்சும் நல்லது பண்ணுங்க. இல்லாட்டி தம்பியின்ர கோபத்துக்கு நீங்களும் ஆளாகவேண்டி வரும்.

இப்ப சொல்லுங்க இந்த ஆணியள புடுங்கிறதா வேண்டாமா?


Thursday, August 19, 2010

அகிம்சையும் இந்தியாவும்

இந்திய ஆளும் வர்க்கத்தின் அட்டூளியங்களை இப்பொழுதெல்லாம் அதிகமான ஊடகங்களில் பார்க்கக்கூடியதாக உள்ளது.




தங்களை தாங்களே வல்லரசு என்று இன்னும் எத்தனை நாள் தான் சொல்வது. முதலில் உள் நாட்டிற்குள் நல்லரசாக இருப்பது நல்லது. எதிர்வரும் காலங்களில் இது போன்ற புகைப்படங்களை அதிகம் எதிர்பார்க்கலாம் என்றே நினைக்கின்றேன்.



18.08.2010 அன்று சுவிசில் வெளியாகும் இலவசப்பத்திரிகையான (அதிக மக்களால் வாசிக்கப்படும் பத்திரிக்கை) இல் இன்றை புகைப்படம் என்ற தலைப்பில் நடுப்பக்கத்தில் வெளியான புகைப்படத்தை இங்கே காண்கின்றீர்கள்.



„ஆளும்வர்க்கத்திற்கு போராடும் இந்த மக்கள் மீது கருணை இல்லை. விவசாயிகளை அகற்றி விட்டு அவ்விடத்தில் வேக வீதி அமைப்பதை எதிர்த்து உத்திர பிரதேசத்தில் போராடிய விவசாயிகளை அடித்து விரட்டுகிறது அரசாங்கம்“ என்று மேற் குறிப்பிட்ட படத்தினை விளக்கியுள்ளது.

Tuesday, August 17, 2010

கடுப்பேத்துகிறார்கள் மை லாட்

தமிழன் சினிமாவுக்கு கொடுக்கும் முக்தியத்துவத்தை வேற எதுக்குமே குடுக்கிறதில்லை.



ஒரு நடிகை கர்பமா இருந்தால் அது முதல் பக்கச்செய்தி,

படப்பிடிப்பில் நடிகை நடிகைகளுக்கு சுளுக்கு பிடித்தால் அன்று அது தான் தலைப்பு செய்தி,

ஒரு நடிகர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அது பரபரப்பு செய்தி,

புதிய படங்கள் வருகிறதென்றால் பத்திரிக்கைகளிலும் தொலைகாட்சிகளிலும் அது தான் தலையாய செய்தி,

ஒரு கிழட்டு நடிகர் இமயமலையில் போய் படுத்தா அது செய்தி,

ஒரு குண்டு நடிகர் கார் பந்தயத்தில் கடைசியாக வந்தாலும் அது கவர் ஸ்டோரி.

ஒரு *****(நீங்களே விரும்பின சொல்லை போடுங்க) நடிகன்/நடிகை வந்தால் அதுவளோட சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கிறதுக்கு மணத்தியால கணக்கில கார் ஓடி, அதுவளை மணத்தியால கணக்கில தேடி, அதுவளோட சேர்ந்து ஒரு போட்டோ எடுத்திட்டா நீங்க பிறந்த பலனை அடைஞ்சிட்டீங்களாடா? அவங்கள் உங்களை செருப்பால அடிச்சாலும் அவங்களிட்டதான் போகனும் என்டு ஏண்டா அடம்பிடிக்கிறீயள்????? என்னை கடுப்பேத்துகிறார்கள் மை லாட்! இதில தங்களுக்குள்ள யார் அந்த நடிகை/நடிகன் மாதிரி இருக்கினம் என்டு சண்டை வேற. வாயில வருது நல்லா... பப்ளிக் இடமா இருக்கிறதால தப்பிச்சிங்கடா!