Thursday, November 18, 2010

ACN வீடியோ தொ(ல்)லைபேசி...எல்லாமே இலவசம்...?

தமிழர்களை உலகத்தில இருக்கிற எல்லா இனமும் எமாத்தி முடிஞ்சு, இனி எங்களை ஏமாத்திறதுக்கு யாரு இருக்கினம்? யாருமே இல்லாட்டில் என்ன. தமிழனை ஏமாத்த எங்கயாவது இருந்து ஒரு தமிழன் வருவான்.

இந்த வரிசையில் தற்பொழுது இணைஞ்சிருக்கிறது ACN வீடியோ இலவச தொலைபேசி நிறுவனத்தினர்.

இதை ஒரு நிறுவனம் என்டு சொல்லுறதை விட ஒரு கொள்ளைக்கும்பல் என்று சொல்லலாம். இப்ப சுவிசில இவையள் மும்முரமா ஆட்கள் சேர்க்கத்தொடங்கி இருக்கினம்.

சரி இப்ப விசயத்துக்கு வருவம்.

ACN என்ட நிறுவனம் பல ஆண்டுகளாக விடியோ தொலைபேசி சந்தையில வெற்றிகரமா நடந்து கொண்டிருக்கிற ஒரு நிறுவனமாம்.

கிட்டத்தட்ட 21 நாடுகளில இவையளுக்கு மில்லியன் கணக்கில வாடிக்கையாளர்கள் இருக்கினமாம். இவையின்ர சேவையில சேர்ந்து பணக்காரர்கள் ஆன ஆக்களின்ர போட்டோக்கள் அடிங்கிய ஒரு விளம்பர புத்தகமும் கையில் கொண்டு வருவினம்.
நீங்களும் எப்படி பணக்காரர் ஆகலாம் என்டு உங்களுக்கு மூளைச்சலவை செய்யப்படும்.



இவையின்ர தொழில் தான் என்ன?

நீங்கள் தற்பொழுது பாவிக்கும் தொலைபேசி இணைப்பிற்கு செலுத்தும் அதே மாதாந்த பணத்தை தான் இவர்களுக்கும் செலுத்த வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் நீங்கள் அனைவருடனும் (இது பொய்) இலவசமாக பேசலாம் என்பார்கள். சிறிலங்கா இந்தியா போன்ற நாடுகளிற்கும் விடியோ தொலைபேசி பாவிக்கலாம் என்பார்கள். நீங்கள் இவர்கிளிற்கு ஒரு வாடிக்கையாளரை சேர்த்துவிட்டால் உங்களிற்கு கமிசன் கிடைக்கும். பின்பு நீங்கள் சேர்த்துவிடுபவர் கொண்டு வந்து சேர்த்துவிடுபவர்களிற்கும் உங்களிற்கு கமிசன் கிடைக்கும்.


மேலே குறிப்பிட்டது போல இவர்களின் சேவை 21 நாடுகளில் உள்ளது. இந்த 21 நாடுகளில் சிறிலங்கா, இந்தியா, மலேசியா போன்ற தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகள் இல்லை. அப்படியென்றால் இந்த நாடுகளிற்கு விடியோ தொலை பேசி அழைப்பு சாத்தியமில்லையா? இருக்கிறது. இங்கே தான் இவர்களின் ஏமாற்று வேலை வெளிவருகின்றது.  சிறிலங்காவில் வசிக்கும் உங்கள் உறவினரிடம் இந்த சேவை இருக்க முடியாது (சிறிலங்காவில் இவர்களின் சேவை இல்லை).ஆனால் உங்களின் உறவினரிடம் விடியோ பார்த்து பேசும் தொலைபேசி இருந்தால் நீங்கள் அவாருடன் பேசலாம். ஆனால் இலவசமாக அல்ல! ACN வைத்திருப்பவர்களுடன் மட்டுமே நீங்கள் இலவசமாக பேசலாம். ஆனால் இதை அவர்கள் உங்களிடம் சொல்ல மாட்டார்கள். அப்படியே நீங்கள் கேட்டால் ஆம் இலவசம் என்று உங்களை ஏமாற்றுவார்கள். இந்த இடத்தில் நீங்கள் அதை உடனடியாக அந்த இடத்திலயே எழுத்து மூலமாக தர முடியுமா என்று கேட்கவும். எப்படியும் எதோ சொல்லி உங்களை சமாளிப்பார்கள். ஏமாற வேண்டாம்!

சரி இதெல்லாம் கவனிக்காமல் நீங்கள் கையெழுத்துப்போட்டு அவர்களின் சேவையில் இணைந்து விட்டிர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

ஒரு மாதம் களித்து நீங்கள் பில் வருகிறது. பில்லை பார்த்து நீங்கள் அதிச்ச்சியடைந்து இவர்களிற்கு புகார் செய்து கடிதம் எழுதுகிறீர்கள். எங்கே அனுப்புவீர்கள்? அவர்களின் முகவரி இது தான்: ACN Communications Schweiz GmbH, c/o TMF Services SA, Rue de Hesse 16, 1200 Genève (தகவல் http://www.moneyhouse.ch/). இங்கே இவர்களின் இரண்டாவது கோல்மால் வேலை அப்பட்டமாகின்றது. அதாவது நீங்கள் கையொப்பம் இட்ட பத்திரத்தில் இவர்களின் முகவரி வெறுமனே ACN Communications Schweiz GmbH, Rue de Hesse 16, 1200 Genève என்று மட்டுமே இருக்கும். இப்பொழுது நீங்கள் புகார் கடிதம் அனுப்புவதென்றால் எங்கே அனுப்புவிர்கள்? ஆம், நீங்கள் கையெழுத்திட்ட படிவத்தில் உள்ள ACN Communications Schweiz GmbH, Rue de Hesse 16, 1200 Genève  முகவரிக்கு தான் அனுப்புவிர்கள் (வேறு முகவரி நீங்கள் அறிந்திருக்கு சாத்தியம் இல்லை).  ஆனால் இது போய் சேர்வது சாத்தியமில்லாத ஒரு விடயம். அதாவது உங்கள் வீட்டில் நீங்கள் ஒருவரை வாடகைக்கு வைத்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். வீடு உங்களின் பெயரில் உள்ளது. நீங்கள் வாடகைக்கு வைத்திருப்பவர்க்கு யாராவது அவரின் பெயரை எழுதி கடிதம் போட்டால் வந்து சேராது என்பதை விளங்கிக்கொள்கிறீர்களா? ஆனால் நீங்கள் வாடகைக்கு வைத்திருப்பவரின் பெயரை எழுதி விட்டு c/o என்று உங்களின் பெயரை போட்டால் வந்து சேரும். இந்த நிறுவனத்தாரிற்கு நீங்கள் புகார் அனுப்பும் போது c/o TMF Services SA என்று முகவரியையும் சேர்க்க வேண்டும் என்று உங்களிற்கு எப்படி தெரியும்? இதை அவர்கள் உங்களிடம் சொல்லவும் மாட்டார்கள். அப்படியே நீங்கள் இவர்கள் மேல் சட்ட நடிவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் உங்களிற்கு வந்து சேரும் அதிக படியான நட்டத்தொகை CHF 20'000.00 மட்டுமே. இவர்களின் ACN Communications Schweiz GmbHவின் கப்பிட்டல் (capital) வெறும் CHF 20'000.00 மட்டுமே.

இப்படியான சேவைகளை இங்கே Schneeballsystem அல்லது Pryamidensystem என்று சொல்வார்கள். சரி ஒரு தடவை கணக்கு பார்ப்போம்.
ஒரு நாள் சுவிசில் உள்ள ஒருவர் சுவிசின் முதலாவது வாடிக்கையாளர் ஆகின்றார். அவர் தனக்கு தெரிந்த ஒருவரை ACN நிறுவனத்தில் சேர்த்து விடுகின்றார். ஒவ்வொருவருக்கும் கமிசன் வரும் என்பதால் உற்சாமாக ஆட்களை சேர்க்கு முயற்சி செய்வார்கள்.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாரமும் ஒரு வாடிக்கையாளரை கொண்டு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். புதிதாக இணைபவர்களும் ஒவ்வொருவரை கொண்டு வருகிறார்கள். இப்படியே போனால் 27 வாரங்கள் சென்ற பின் அதாவது அரை வருடத்திற்கு பிறகு சுவிசில் கிட்டத்தட்ட 134 மில்லியன் ACN வாடிக்கையாளர்கள் இருக்க வேண்டும். இது சாத்தியமா?


இதை நீங்கள் அவர்களிடம் சொன்னால் இன்டர்நெட்டில் வருகின்ற அனைத்தும் உண்மையாகி விடுமா? அங்கே யார் என்ன எழுதினாலும் உண்மை என்று நம்பி விடுவீர்களா என்று உங்களை குறுக்குக்கேள்வி கேட்பார்கள்.

சரி நான் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டாம்.
சுவிசில் இருந்து வெளிவரும் http://www.ktipp.ch/ என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.



கொஞ்சம் இன்டர்நெட்டை தோண்டிப்பாத்த இவங்கட சுத்துமாத்து வேலையள் தெரியவரும்.

இந்த தமிழ் பணப்பேய்களை எங்கே கண்டாலும் ஒதுங்கியே நில்லுங்கள். ஏமாந்து போற நாங்கள் இருக்கிற வரைக்கும் ஏமாத்திற தமிழங்களும் இருக்கத்தான் செய்வினம்.

Thursday, November 4, 2010

இந்திய மதவாதியின் குறான் எரிப்பு

எதிர்வரும் வெள்ளிக்கிழமை மூன்று இந்திய மதவாதிகள் சுவிசின் பாராளுமன்றம் முன்பாக குறான் எரித்து போராட்டம் செய்யவுள்ளதாக இன்று பத்திரிகையில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

றோம் (இத்தாலி) நகரில் Tetus Leo Panakal


ஒரு பிள்ளையும் குறானுடன் தொடர்பில் வருவதை தான் விரும்பவில்லை என்று கடந்த 8 வருடமாக சுவிசில் வசிக்கும் Tetus Leo Panakal  (42) ௬றுகிறார்.

குறானில் இருப்பது பொய் மற்றும் கொடியவை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புனிதமான குறானை எரிப்பது மக்களிடத்தில் பல பிரச்சனைகளை கொண்டுவரும் என்று மத குருமார்கள் ௬றுகிறார்கள்.

Tetus Leo Panakal  (42)  இந்த போராட்டத்தில் தனது உயிர் போனாலும் அதை பற்றி தான் கவலையடயப்போவதில்லை என்று ௬றுகிறார்.

ஏற்கனவே கடந்த மாதம் அமெரிக்காவில் இப்படியான ஒரு செயலை பராக் ஒபாமா தலையிட்டு நிறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிகையில் வெளிவந்த செய்தி